நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் விளையாடும் தமிழ்
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
- ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு எட்டிய இறைவன் திருவடிகளை அடைவார்கள். எந்த இறைவனும் குறையில்லாதவன். அவரவர் விதிப்படி அவரவர் இறைவனை அடைவார்கள்.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.
- இறைவன் உள்ளான் என்றால் உள்ளான். உளன் அலன் (இல்லை) என்றால் இல்லை. உள்ளவனாகவும், இல்லாதவனாகவும் ஒழிவில்லாமல் எங்கும் பரந்துகிடக்கிறான்.
No comments:
Post a Comment