Friday, August 23, 2019

இரட்டைப் புலவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்த  ஆமிலந்துறை  என்ற ஊரில் பிறந்து  வாழ்ந்தவர்கள்


இவர்கள் பாடிய அம்மானைப் பாடல்கள் சிலேடை நலம் மிக்கவை.

அம்மானை என்பது மூன்று பேர் வட்டமாக அமர்ந்துகொண்டு நான்கு பந்துகளைப் பக்கத்தில் இருப்பவரிடம் தூக்கிப் போட்டு பந்து கீழே விழாமல் விளையாடும் ஒருவகை விளையாட்டு. மூவரும் ஒவ்வொருவராகப் பாடிக்கொண்டே அம்மானைப் பந்துகளையும் ஆடவேண்டும்.

இப்படி அம்மானை ஆடும் பாடல்தான் அம்மானைப் பாடல்.


தென் புலியூர்த் தில்லைச்சிற் றம்பரத்தே
வெம்புலியொன் றென்நாளும்  மேவுங்காண் அம்மானை
வெம்புலியொன் றென்நாளும் மேவுமே  யாமாகில்
அம்பலத்தை விட்டே  அகலாதோ அம்மானை !
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை ‘

வியாக்கிர பாதர் என்பவர் ஒரு சித்தர்.
அரிய வகைப் புத்தம்புது பூக்களால் சிவபெருமானை பூசனை செய்துவந்தார்.
பூக்களை மரத்தில் ஏறிப் பறிப்பதற்காக புலிக்கால் நகங்களைச் சிவபெருமானிடம் வரமாப் பெற்றார்.
அதனால் அவரைப் புலிக்கால் முனிவர் என்றனர்.
இவர் தென்புலியூர் கோயிலிலேயே தங்கிவிட்டார்.

பாடல் சொல்கிறதுந
தில்லை (சிதம்பரம்) சிற்றம்பலத்தில் விரும்பதக்க புலி வாழ்கிறது – அம்மானை
அது அம்பலத்தை விட்டு அகலாதோ – அம்மானை
ஆட்டை விட்டு வேங்கை அகலுமோ – அம்மானை
சிவபெருமான் ஆட்டத்தைக் காண்பதை விட்டுவிட்டு வேங்கைப்புலி அகலுமோ
ஆடு = ஆடுதல்
ஆடு = ஆடு என்னும் விலங்கு
ஆட்டைப் பிடித்துத் தின்னுவதை விட்டுவிட்டு வேங்கைப்புலி அகலுமோ?
இப்படி இரட்டுற மொழியப்பட்ட பாடல் இது.

மற்றொரு அம்மானைப் பாடல்
கச்சி ஏகாம்பர நாதரைப் பாடிய கலம்பகத்தில் உள்ளது.

ஏகாம்பரம் = ஏக அம்பரம் = ஒரே வானவெளி = ஒரே ஆகாசம்
ஆகாயமே சிவபெருமான் மேனி.
காஞ்சி காமாட்சி எகாம்பர நாதரைத் தழுவினாள்.
அவளது முலை ஏகாம்பரர் மார்பில் வடுவை உண்டாக்கிவிட்டது.
இது கதை.

ஆகாயத்தில் காயம் உண்டாக்கமுடியாதே.
எப்படி வடுப் பட்டது? – இது வினா

ஏகாம்பர நாதர் கோயில் காவல்மரம் மாமரம்.
மாமரத்தடியில் மாவடு விழாதா என்பது விடை.

வடு = தழும்பு – சிவபெருமான் கதையில்
வடு = மாவடு – கோயில்மரம் (தல விருட்சம்)

எண்ணரிய காஞ்சில்வாழ் ஏகாம்பர நாத
அண்ணல்திரு மேனிஎங்கும் ஆகாசம் அம்மானை!அண்ணல்திரு மேனியெங்கும் ஆகாசம் மாயின்
வண்ணமுலை மார்பில் வடுப்படுமோ அம்மானை?மாவடியில் வாழ்பவருக்கு வடுவரிதோ அம்மானை! 

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...